ரைனோசெரஸ்வண்டு: ஒரைடக்ஸ் ரைனோசெரஸ்
அறிகுறிகள்:
- அடித்தண்டில் வண்டு குடைவதால் செடி வாடும்.
பூச்சியின் விபரம்:
- புழு – நத்தை புழு போன்று ‘L’ வடிவத்தில், வெள்ளை நிறத்தில் காணப்படும்.
- பூச்சி – தடித்து, பழுப்பு கலந்த கருப்பு நிறத் தலையுடன், தலையிலிருந்து கொம்பு நீட்டிக் கொண்டிருக்கும்.
கட்டுப்பாடு:
- இறந்த பைனாபிள் மரங்களை அகற்றி, எரித்தல்
- சேதமடைந்த அல்லது பூச்சியின் பல நிலைகளையும் சேகரித்து, உரக்குழியில் இட்டு அழித்தல்.
- மரத்தின் அடிப்புறத்திலிருன்து புழுக்களை இரும்பு கம்பி கொண்டு குடைந்து வெளியே எடுத்தல்.
- விளக்குப் பொறி 1/ஹெக்டர் என்ற அளவில் அமைத்தல்.
- ஆமணக்கு கட்டி 1 கிலோவை 5 லிட்டர் தண்ணீரில் கரைத்து, சிறிய மண் பானைகளில் தோட்டத்தில் வைத்தல்.
- மெட்டார்சியம் அனிசோபில்லே, மேக்குலோவைரஸ்ஸை வெளிவிடுதல்.
- ரைனோலுயூர் கொடி பொறியை பயன்படுத்துதல்.
- இரை விழுங்கிகளான ப்ளேட்டிமெரிஸ் லேவிக்கொலிஸ் தோட்டத்தில் விடுதல்
- கார்பைரில் 0.1% மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தெளித்தல்
- மாலத்தியான் 5% தெளித்தல்.
|
|